May 24, 2019 Friday 08.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 12:46 PM

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் நிதிஉதவி - தமிழக அரசு அறிவிப்பு 

Posted Date : Feb 11 2019 12:46 PM

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று விதி எண்  110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

வறுமைகோட்டிற்கு கீழுள்ள விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் மீனவ தொழிலாளர் குடும்பங்களுக்கு  ரூ. 2 ஆயிரம்  சிறப்பு நிதி வழங்கப்படும். 

தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை