February 24, 2019 Sunday 10.51 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 1:22 PM

ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

Posted Date : Feb 11 2019 1:22 PM

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017ம் ஆண்டு தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. ஆணையத்தின் விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும்.

இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. 

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் அப்பல்லோவின் கோரிக்கையை நிராகரித்தனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments