May 24, 2019 Friday 08.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 4:02 PM

திருப்பத்தூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு - புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

Posted Date : Feb 11 2019 4:02 PM

 திருப்பத்தூர் அருகே ரத்தினவேல் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துவருகிறார். இதுகுறித்து ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, செவ்வாத்தூர் ஊராட்சி, சாலூர் கிராமத்தில், மங்கம்மா சாலை சர்வே எண். 80 அரசு வாரி புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த புறம்போக்கு நிலத்தை அதே பகுதியை சார்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ரத்தினவேல் என்பவர் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.  பல வருடங்களுக்கு முன்பு இந்த புறம்போக்கு நிலத்தின் சாலை ஓரத்தில் கிணறு தோண்டி, போலியான ஆவணங்களை திருப்பத்தூர் துணை வட்டாட்சியர் மற்றும் செவ்வாத்தூர் கிராம அலுவலரிடம் பெற்றுள்ளார். 

வீடு மற்றும் கிணற்றிற்கு மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்துகொண்டு வருகிறார். இதில் சாலை ஓரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது.  

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(RTI) மூலமாக பெறப்பட்ட ஆவணங்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்களிடம் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை சார்பாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக மனு அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாச்சியர் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக படிவம் 6 மற்றும் 7 ஆகியவற்றை ஆக்கிரமிப்பாளரிடம் வழங்கியுள்ளார். 

தற்போது இரண்டு மாதங்கள் ஆகியும் வட்டாச்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் சார் ஆட்சியர்கள் அவர்கள் தலையிட்டு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, மின் இணைப்பைத் துண்டித்து போலியான ஆவணங்களை பெற்று குற்ற செயலில் ஈடுபட்டுள்ள ரத்தினவேலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை