February 24, 2019 Sunday 10.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 4:58 PM

வாக்குப்பதிவு எந்திரத்தால் பாஜகவால் 43 என்ன 48 தொகுதிகளையும் வெல்ல முடியும் - சிவசேனா 

Posted Date : Feb 11 2019 4:58 PM

பாஜகவிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் இருந்தால், அதிகமான நம்பிக்கை இருந்தால், 43 தொகுதிகளில் அல்ல 48 தொகுதிகளையும் வெல்ல முடியும் என்று சிவசேனா கிண்டல் செய்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டியிட்டது. ஆனால், ராமர் கோவில் உட்பட பல விவகாரங்களில் சிவசேனா பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மாநில பாஜக தலைவர் ரோஷாகேப் தான்வே ஆகியோர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் கடந்த முறை வென்ற 42 இடங்களைக் காட்டிலும் ஒரு இடம் கூடுதலாக 43 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று பேசினார்கள்.

இவர்கள் இருவரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சிவசேனாவில் தலையங்கத்தில் எழுதியுள்ளது. 

சாம்னாவில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அகமதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் மகள்கள் நடத்திய போராட்டத்தை நசுக்க முயற்சித்தது. பால் உற்பத்தியாளர்களுக்கும், வெங்காயம் பயிர் செய்த விவசாயிகளுக்கும் எந்தவிதமான நல்ல பலனும் இல்லை, வருமானமும் இல்லை.

அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்பக் கோரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் அரசு நடத்திவரும் விடுதிகளில் ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வும் இல்லை. ஆனால், மாநிலத்தில் 43 தொகுதிகளில் வென்றுவிடுவோம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

மக்கள் பிரச்சினைகளைக் காட்டிலும் அரசியலுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்படுகிறது. குளிர்ந்த சூழலால் சில நேரங்களில் பனித்துளி உறையக்கூடும், அதுபோலவே ஆட்சியாளர்களின் மனநிலையும் உறைந்துள்ளது.

சிவசேனா, பாஜக இடையே மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுபோன்ற சூழல்கள் எங்களால் உருவாக்கப்படவில்லை. இதுபோன்ற பாவ விதையை பாஜகவினர்தான் விதைத்துள்ளார்கள்.

எங்களைப் பொருத்தவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். தேர்தலில் 43 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று அபரிமிதமான நம்பிக்கையில் முதல்வரும், மாநில பாஜக தலைவரும் பேசியுள்ளார். இருவரின் பேச்சு நம்பமுடியாத வகையிலும், உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது

ஒருவேளை பாஜகவிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் இருந்தால், அதிகமான நம்பிக்கை இருந்தால், 43 தொகுதிகளில் அல்ல 48 தொகுதிகளையும் வெல்ல முடியும். லண்டன், அமெரிக்காவில் கூட தாமரை மலர முடியும். ஆனால், ராமர் கோயில் ஏன் இதுவரை கட்டப்படவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments