February 24, 2019 Sunday 11.04 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 12 2019 11:58 AM

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் பயணம் இலவசம்!

Posted Date : Feb 12 2019 11:58 AM

வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரை மெட்ரோ சேவை துவக்கப்பட்டதை முன்னிட்டு மூன்றாவது நாளாக இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து, 10-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களின் முழுமையான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச பயணத்துக்கும் நேற்று இரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி துவக்கப்பட்ட வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments