May 24, 2019 Friday 09.02 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 12 2019 1:58 PM

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் - நெட்டிசன்கள் விமர்சனம் 

Posted Date : Feb 12 2019 1:58 PM

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி வேம்பு என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் அரசு விழாக்களில் கட்டாயமில்லை என்று கூறுவது முரணாக உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை