February 24, 2019 Sunday 10.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 12 2019 3:17 PM

தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடையா? - அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் தகவல் 

Posted Date : Feb 12 2019 3:17 PM

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.

இன்று சட்டபேரைவில் மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., "டிக் டாக் செயலியால் ஆபாசமும், சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுவதாகவும், தமிழகத்தின் கலாச்சாரத்தை அழிக்கும் டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்றும்" கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், "டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும்" உறுதியளித்தார்.

தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட டிக் டாக் செயலியை தற்போது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தவறான வகையில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Suggest a
correction
View
Comments
Post
Comments