May 24, 2019 Friday 09.21 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 12 2019 3:38 PM

அதிமுகவிற்கே எனது ஆதரவு - எம்.எல்.ஏ. கருணாஸ் 

Posted Date : Feb 12 2019 3:38 PM

அதிமுகவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று எம்.எல்.ஏ.கருணாஸ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய கருணாஸ், "அதிமுக அரசிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன். 5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக அரசு ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். இனி தேர்தலில் போட்டியிடுவேனா என்பது தமக்கு தெரியாது" என்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை கருணாஸ் கடுமையாக விமர்சித்து பேசினார். இதனையடுத்து கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை