#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
டெல்லி நட்சத்திர உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர உணவகம் இயங்கி வருகிறது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது. தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கோவையை சேர்ந்த அரவிந்த சிவகுமாரன் மற்றும் நந்தகுமார் உடல்கருகி உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.