May 22, 2019 Wednesday 10.35 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 18 2019 4:49 PM

ஐ.டி. நிறுவனத்திடம் லஞ்சம் - தலைகுனிவு ஏற்படுத்திவிட்டதாக அதிமுகவிற்கு ஸ்டாலின் கண்டனம் 

Posted Date : Feb 18 2019 4:49 PM

ஐ.டி. நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி தமிழகத்துக்கு அதிமுக அரசு தலைகுனிவு ஏற்படுத்திவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

சென்னை சிறுசேரியில் காக்னிசன்ட் நிறுவனத்துக்கு கட்டட அனுமதி, மின் இணைப்பு அனுமதி, சுற்றுசூழல் அனுமதி வழங்க அதிமுக அரசு லஞ்சம் பெற்றுள்ளது. அதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி லஞ்சம் தந்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கால் உலக அரங்கில் தமிழக அரசுக்கு பெரும் அவமானம். மேலும் காக்னிசன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அதிமுக அரசு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியால் உலக அரங்கில் தமிழர்களுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

காக்னிசன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது வழக்குப்பதிய வேண்டும். அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து லஞ்சம் தொடர்பான ஆவணங்களை பெற வேண்டும். அந்த ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காக்னிசன்ட் நிறுவனத்திடம் 2012 முதல் 2016-க்குள் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. 2012-ல் இருந்து 2016 வரை அமைச்சர்களாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் வீட்டுவசதி அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, பி.வி ரமணா, எம்.சி.சம்பத்தும் 2012 முதல் அமைச்சர்களாக இருந்தனர். தோப்பு வெங்கடாசலம், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments