May 24, 2019 Friday 08.53 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 19 2019 3:55 PM

முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் - ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு 

Posted Date : Feb 19 2019 3:55 PM

2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் மார்ச் 23ம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஐ.பி.எல். முன்னதாகவே தொடங்க உள்ளது. கடந்த 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஐ.பி.எல்.போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு இந்தியாவிலேயே போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் மார்ச் 23ம் தேதி நடைபெறும் என்றும், முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை