May 22, 2019 Wednesday 11.01 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 23 2019 12:58 PM

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம் 

Posted Date : Feb 23 2019 12:58 PM

ஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்டனர். 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பின் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று காஷ்மீரின் மத்திய, வடக்கு மற்றும் தென் பகுதி மாவட்டங்கில் காவல்துறையினர் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் அப்துல் ஹமித் பயாஸ், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறையின் திடீர் கைது நடவடிக்கையாலும், எதற்காக கைது செய்கிறார்கள், காரணத்தைக் கூறாமல் இருப்பதாலும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 
கைது நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "கடந்த 24 மணிநேரத்தில் ஹுரியத் தலைவர்கள் மற்றும் ஜமாத் அமைப்பின் தொண்டர்கள் காவல்துறையால் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த தன்னிச்சையான செயலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். எந்தச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீங்கள் ஒரு மனிதரைக் கைது செய்யலாம், ஆனால், அவரின் சிந்தனைகளை சிறை வைக்க முடியாது" என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments