March 23, 2019 Saturday 07.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 23 2019 4:19 PM

மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு 

Posted Date : Feb 23 2019 4:19 PM

திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயராளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு்ளளார்.

மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக சார்பில் ஏற்கனவே விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில்  வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம் என்று திமுக அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

மேலும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் தி.மு.க. விண்ணப்பம் கோருகிறது எனவும், மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments