March 23, 2019 Saturday 07.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 23 2019 7:04 PM

அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு 

Posted Date : Feb 23 2019 7:04 PM

அசாமில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அசாம் கோலாஹட்டின் சல்மாரா டீ தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைசெய்துகொண்டு, அங்கேயே வசிக்கின்றனர். தொழிலாளர்களில் ஒருவரான திரௌபதி ஒரான் என்பவரின் வீட்டில் வைத்து வியாழக்கிழமை அன்று ஏராளமான தொழிலாளர்கள் இணைந்து சாராயம் குடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நள்ளிரவிலேயே ஏராளமானோர்  உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது 26 பெண்கள் உட்பட 69 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கோலாஹட் துணை ஆணையர் திரென் ஹஸாரிகா, ''சனிக்கிழமை காலை கோலாஹட்டில் 50 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 28 பேர் கோலாஹட் மருத்துவமனை மற்றும் கிராமங்களில் இறந்தவர்கள். 22 பேர் ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

ஜோர்ஹாத் மாவட்டத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 8 பேர் டீ தோட்டத்திலும் பலியாகியுள்ளனர்'' என்றார். 

உள்ளூர் மக்கள் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ''இரு மாவட்டங்களில் இருந்து 128 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கள்ளச் சாராயத்தில் தீங்கை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருக்கக் கூடும். சோதனை முடிவுகள் வந்த பின்னரே உண்மை தெரியும்'' என்றனர்.

இதைத் தொடர்ந்த விசாரணையில் டீ எஸ்டேட்டில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் டீ எஸ்டேட்டில் சாராயம் காய்ச்சுவது ஒழிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறிவந்த நிலையில், எங்கிருந்து சாராயம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

கடந்தமாதம் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Suggest a
correction
View
Comments
Post
Comments