May 22, 2019 Wednesday 10.38 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 23 2019 7:33 PM

மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

Posted Date : Feb 23 2019 7:33 PM

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இன்று டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் முதல் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். 

டெல்லியில் உள்ள மக்கள் தங்களை ஆளும் அரசை வாக்களித்து தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஜனநாயகம் டெல்லிக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன்? 

எனவே, மார்ச் முதல் தேதியில் இருந்து டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார். 

Suggest a
correction
View
Comments
Post
Comments