May 22, 2019 Wednesday 11.02 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 26 2019 7:21 PM

ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி!

Posted Date : Feb 26 2019 7:21 PM

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா, 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாக ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், "ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தை விதிகளை மீறியது" உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா, 445 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 21 சதங்கள் மற்றும் 323 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றவர் ஜெயசூரியா. அவர், சர்வதேச போட்டிகளில் இருந்து 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments