November 12, 2019 Tuesday 04.54 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 26 2019 8:10 PM

திறந்தவெளியில் இந்தியா வெடிகுண்டுகளை வீசியதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை - பாகிஸ்தான் 

Posted Date : Feb 26 2019 8:10 PM

திறந்தவெளியில் இந்தியா வெடிகுண்டுகளை வீசியதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று இந்தியத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்பு படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜெய்இமுகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 300 பேர் வரை இறந்திருக்கலாம் என்று இந்தியா ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்தநிலையில், இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஃசிப் காஃபூர் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் முசாபராபாத் பகுதி வழியாக இந்திய போர்விமானங்கள் நுழைந்துள்ளது. பாகிஸ்தானின் விமான வெளியில் நான்கு மைல்கள் வரைதான் இந்தியா விமானப்படை நுழைந்துள்ளது. இந்திய விமானப்படைக்கு பாகிஸ்தான் விமானப் படை உடனே தக்க எதிர்வினை ஆற்றியது.

பாகிஸ்தான் விமானப் படை உடனே எதிர்வினையாற்றியதால், அவசரமாக திறந்தவெளியில் இந்தியா விமானப் படை வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசியது. அதனால், எந்தக் கட்டுமானத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முக்கிய தீவிரவாதி உட்பட பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இந்தியாவும், யாருமே கொள்ளப்படவில்லை என்று பாகிஸ்தானும் கூறியுள்ளதால் யார் சொல்வது உண்மை என்ற குழப்பமான நிலையே நீடிக்கிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை