May 22, 2019 Wednesday 10.07 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 28 2019 11:50 AM

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவின் வேண்டுகோள்!

Posted Date : Feb 28 2019 11:50 AM

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை என்றுஇந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக நேற்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

இதுகுறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவிவருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தானை சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நோபல் பரிசு பெற்றவர், யூனிசெஃபின் அமைதிக்கான தூதர் என்ற முறையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லையில் வசிக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டு நான் இதை கூறுகிறேன். அனைவருக்கும் போரின் கொடுமைகள் தெரியும். பழவாங்குவது  நல்ல பதிலடி தாக்குதலாக ஒருபோதும் இருக்காது. போர் ஆரம்பித்துவிட்டால் அது அபூர்வமாகத்தான் முடியும். பல லட்சணக்கான மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை.  தற்போது போரின் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், இந்திய பிரதமர் மோடியும் கடினமான நேரங்களில்  உண்மையான  தலைமைப் பண்பை காண்பிக்க வேண்டும். இருவரும் அமர்த்து பேசி, கைகுலுக்கி பேச்சு வார்த்தை மூலம் தற்போதுள்ள மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழப்புகளை தவிர்க்க இந்தியா - பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை சர்வதேச சமுகம் ஆதரிக்க வேண்டும்.

இரு நாடுகளின் குடிமக்களுக்கும் அவர்களது எதிரி தீவிரவாதம், படிப்பறிவின்மை, ஏழ்மை என்று நன்கு தெரியும். இரு நாடுகளும் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments