March 23, 2019 Saturday 07.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 28 2019 4:58 PM

எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு 

Posted Date : Feb 28 2019 4:58 PM

எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அபிநந்தனை விடுவிக்க இந்தியா அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments