May 22, 2019 Wednesday 10.07 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 28 2019 8:25 PM

நடிகர் விஜய் சேதுபதி உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு 

Posted Date : Feb 28 2019 8:25 PM

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் நடிகர் விஜய் சேதுபதி உட்பட 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுடன் தலா ரூ.1 லட்சம் காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, சந்தானம், பிரசன்னா, பிரபுதேவா, சரவணனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ஆர். ராஜசேகர், பி.ராஜீவ், பி.பாண்டு, ஆர்.பாண்டியராஜனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழம்பெரும் நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசுகி கண்ணப்பன், முனைவர் கி.சேகருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Suggest a
correction
View
Comments
Post
Comments