March 23, 2019 Saturday 07.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 1 2019 1:52 PM

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார் - பாகிஸ்தான் அமைச்சர் 

Posted Date : Mar 1 2019 1:52 PM

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரெஷி அறிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது முகாம்கள் குண்டு வீசி அழித்தது. இதையடுத்து இந்திய-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த 27ம் தேதி பாகிஸ்தானின் எப் 16 ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

அதேசமயம் பாகிஸ்தானிற்கு பதில் தாக்குதல் நடத்த மிக் 21 ரக போர் விமானத்தின் சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கினார். எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களது பாதுகாப்பில் அபிநந்தனை கடந்த இரண்டு நாட்களாக வைத்துள்ளனர். பின்னர் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இன்ரான்கான் நேற்று அறிவித்தார். இதையடுத்து வாகா எல்லையில் விமானி அபிநந்தனை வரவேற்க விமானப்படை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் தங்கள் நாட்டில் தான் உள்ளார் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி அறிவித்துள்ளார். 

மேலும்,  மசூத் அசார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே முடங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார். மசூத் அசாருக்கு எதிராக இந்திய ராணுவம் ஆதாரங்களை அளித்தால், அதனை பரிசீலித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், சுமூக நிலை ஏற்படுவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானி அபிநந்தனை விடுக்க உத்தரவிட்டதாகவும் குரேஷி குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு, இரு நாடுகளையும் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த கூறியது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் பாராட்டியுள்ளார். மேலும், அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவு இருப்பதால் அமெரிக்காவின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். 

Suggest a
correction
View
Comments
Post
Comments