March 23, 2019 Saturday 08.14 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 4 2019 4:43 PM

2020 ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு!

Posted Date : Mar 4 2019 4:43 PM

 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் ஒலிம்பிக் போட்டி என்றழைக்கப்படும் ஆசிய விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் சுமார் 45 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

கடந்த ஆசிய விளையாட்டு போட்டிகள், 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்றது. அடுத்த 2022- ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹேங்சோ நகரில் நடைபெற உள்ளது.

இதனிடையே, போட்டி குறித்த ஏற்பாடுகள் குறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் சீனாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை  சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 2010 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. ஆனால், 2018-ம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது, மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிய நாடுகளின் அணிகள் பங்கேற்கும் என்பதால், பாகிஸ்தானும் இதில் விளையாட உள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியை விளையாடச் செய்வதா? வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments