May 22, 2019 Wednesday 10.52 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 5 2019 11:16 AM

ஒவ்வொரு அறிவிப்புக்குப் பிறகும் ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்: ஊழியர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவு 

Posted Date : Mar 5 2019 11:16 AM

விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்புக்குப் பிறகும் உற்சாகத்துடன் ஜெய்ஹிந்த் என்று சொல்லக் கோரி, ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து இயக்குநர் கேப்டன் அமிதாப் சிங் வெளியிட்ட சுற்றறிக்கையில், ''விமானத்தில் ஒவ்வோர் அறிவிப்புக்குப் பிறகும் சிறிய இடைவெளி விட்டு, மிகுந்த உற்சாகத்துடன் ஜெய்ஹிந்த் என்று கூறுமாறு ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது உடனடியாக அமலுக்கு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெருமையையும் வீரரின் தியாகத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே விமானத் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் அஸ்வானி லோஹானி பதவியேற்ற சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2016-ல் இதே மாதிரியான அறிவுறுத்தல்களை அவர் விமானிகளிடம் மேற்கொண்டிருந்தார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments