May 24, 2019 Friday 09.06 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 8 2019 1:21 PM

புகை மாசை மறைத்ததால் வோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி அபராதம்... 

Posted Date : Mar 8 2019 1:21 PM

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வோக்ஸ்வாகன், தங்களது வாகன தயாரிப்புகளில் புகை மாசை மறைக்க மோசடி கருவியைப் பொருத்தியதாகத் தேசிய பசுமை தீர்ப்பாயம்  500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

2015-ம் ஆண்டு வோக்ஸ்வாகன் நிறுவனம் டீசல் எஞ்சின் வாகனங்களில் மாசு அளவை குறைத்துக் காண்பிக்க மோசடி கருவியைப் பயன்படுத்தியது அமெரிக்காவில் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விண்ட்டர் கார்ன் பொறுப்பேற்று ராஜினாமாவும் செய்தார்.  

தாங்கள் செய்த தவறை வோக்ஸ்வாகன் நிறுவனம் ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலிமிருந்து 1 கோடிக்கும் அதிகமான காரை திரும்பப் பெற்றது.  

இந்நிலையில் இந்தியாவில் உள்ள வோக்ஸ்வாகன் கார்களைச் சோதனை செய்ததில் அவற்றிலும் புகை மாசு மோசடி கருவி பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. முதலில் நவம்பர் மாதம் வோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அதை வோக்ஸ்வாகன் செலுத்த மறுத்து வந்த நிலையில் அதைத் தற்போது 500 கோடி ரூபாயாகப் பசுமை தீர்ப்பாயம் உயர்த்தியுள்ளது. 

ஆனால், வோக்ஸ்வாகன் நிறுவனம் இந்திய விதிகளுக்கு உட்பட்டுத் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அது வந்த உடன் வோக்ஸ்வாகன் குழுமம் உச்ச நீதிமன்றத்தை நாடும் என்றும் தெரிவித்துள்ளனர்.  

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை