March 23, 2019 Saturday 08.17 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 11 2019 5:19 PM

லஞ்சம், ஊழல் புற்று நோய் பரவியுள்ளது; லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் - உயர்நீதிமன்றம்

Posted Date : Mar 11 2019 5:19 PM

தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்புத் தாசில்தார் தர்மராஜ் ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவையடுத்து தர்மராஜ் எதித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கின் அடிப்படையில் தனது பதவி உயர்வைத் தடுக்கும் நோக்கில் 2018- அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தர்மராஜ் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2016-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போது கவனத்துக்கு வந்ததால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஆட்சியர் தரப்பு பதில் அளித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டு தொடர்பாக துறை ரீதியான விசாரணையை முன்னிட்டு அலுவல்களிலிருந்து நீக்கி வைக்கும் நடைமுறைதானே தவிர தண்டனையல்ல எனவே இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேலும், நாடு முழுவதும் ஊழல் புற்று நோய் போல பரவியுள்ளது, இதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளது.

தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் விவகாரங்களை கண்மூடி வேடிக்கைப் பார்த்தல் கூடாது. உயரதிகாரிகளுக்குப் புகார் அளிக்க வேண்டும்.  அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வாங்குவதை முறைப்படுத்தி எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டு குடிமக்கள் சாசனத்தை வெளியிட வேண்டும் என்று நீதிபதி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments