May 22, 2019 Wednesday 10.11 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 2:08 PM

ஜாமீன் கிடைத்தும் வெளிவர முடியாத நிலையில் நிர்மலா தேவி: கையெழுத்து போட உறவினர்கள் மறுப்பு 

Posted Date : Mar 13 2019 2:08 PM

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

இன்று அவர் வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாமினுக்கான ஆவணத்தில் ரத்த சொந்த உறவுகள் மற்றும் நண்பர்கள் கையெழுத்து அவசியம். ஆனால் அதை இட இருதரப்பும் முன்வராததால் இன்று நிர்மலாதேவி ஜாமினில் வர வாய்ப்பில்லை.

இந்நிலையில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், அவரது உறவினர்களிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் நாளை மாலைக்குள் நிர்மலா தேவியை ஜாமினில் கொண்டுவர முயற்சிப்பதாவும் தெரிவித்துள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments