March 23, 2019 Saturday 08.12 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 2:49 PM

காங்கிரசில் இனைந்தார் ஹர்திக் பட்டேல்! 

Posted Date : Mar 13 2019 2:49 PM

பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமான ஹர்திக் பட்டேல், ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

அவருடைய போராட்டத்துக்கு பட்டேல் சமூகத்தினர் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். அவருடைய போராட்டம் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கடந்த, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு இன்று வந்த ஹர்திக் பட்டேல், இன்று காங்கிரசில் இணைந்தார். அவரை ராகுல் காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார். அவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Suggest a
correction
View
Comments
Post
Comments