March 23, 2019 Saturday 08.06 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 4:49 PM

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 

Posted Date : Mar 13 2019 4:49 PM

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி, புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக-தாமாக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் தாமாக தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே ஒப்பந்தம் கேயெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமாகவுக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

Suggest a
correction
View
Comments
Post
Comments