May 24, 2019 Friday 08.36 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 6:01 PM

தான் மட்டும் ஒளிமயமாக இருந்து கொண்டு நாட்டை இருளி்ல் வைத்துள்ளார் - மோடி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted Date : Mar 13 2019 6:01 PM

நாகர்கோவிலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:

இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் இளம் பிரதமராக உள்ளவர் இங்கு வருகை தந்துள்ளார். வர உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் பதவியேற்பார். மோடி ஆட்சியில் நாடு ஒளிமயமானதாக இல்லை. இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களே, ஒளிமயமான இந்தியாவை தருக. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் துணிச்சலோடு அறிவித்தது நான்தான்.

நாட்டின் அனைத்து துறைகளிலுமே வளர்ச்சி காணப்படவில்லை. தளர்ச்சி மட்டுமே காணப்படுகிறது. பிரதமர் மோடி தான் மட்டும் ஒளிமயமாக இருந்து கொண்டு நாட்டை இருளி்ல் வைத்துள்ளார். கண்கட்டி வித்தைக்காரர் போல மோடி செயல்படுகிறார். கறுப்பு பணம் குறித்த மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, கருப்பு பணத்திற்கு பதில் நல்ல பணத்தை மோடி ஒழித்து கட்டிவிட்டார். புதுப்புது ஆடைகள், விதவிதமான தொப்பிகள் அணிந்து நாடு நாடாக சுற்றி வருகிறார் மோடி. கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை.

15 லட்சம் அல்ல 15 ஆயிரம் கூட மோடி அரசால் மக்களின் வங்கி கணக்கில் மோடியால் செலுத்த முடியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து தற்போது மோடிக்கு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இது பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற ஆட்சியாக உள்ளது. எனவே நல்லாட்சி வழங்கிட ராகுலுடன் கைகோர்ப்போம்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை