March 23, 2019 Saturday 08.22 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 13 2019 7:47 PM

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான உடன்பாடு கையெழுத்து 

Posted Date : Mar 13 2019 7:47 PM

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான உடன்பாடு கையெழுத்து ஆகியுள்ளது.  

அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னேர்செல்வம், பாஜக சார்பில் பியூஸ் கோயல், தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் சுதீஷ், பாமக சார்பில் ஜி.கே.மணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரை ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டன. 

பின்னர் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் செல்வம் அறிவித்தார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments