May 24, 2019 Friday 08.25 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 11:18 AM

பொள்ளாச்சி கொடூரம்: மேலும் 3 விடியோக்கள் வெளியானது; பார் நாகராஜும் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்

Posted Date : Mar 14 2019 11:18 AM

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் விவகாரத்தில் மேலும் 3 வீடியோக்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த வீடியோவில் பார் நகராஜ் உள்ளார். இந்த வீடியோவை சபரிராஜன், சதீஷ் ஆகியோர் எடுத்துள்ளதாக அவர்களது பேச்சின் மூலம் தெரியவருகிறது. மேலும், இந்த வீடியோவில் ஒரு பெண்ணை சபரிராஜன் மிரட்டும் காட்சியும் பதிவாகி உள்ளது.

முன்னதாக கோவை எஸ்.பி. பாண்டியராஜன் 4 பேரை தவிர வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போது பார் நாகராஜும் பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து பார் நாகராஜை கைது செய்ய தமிழகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை