March 23, 2019 Saturday 07.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 11:42 AM

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் அவுட் வைக்க தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

Posted Date : Mar 14 2019 11:42 AM

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் அவுட் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி பேனர்களை வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். சில சமயங்களில் சட்டவிரோத பேனர்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.

விதிமீறி பேனர் வைக்க பல முறை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசியல் கட்சிகள் மதிப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்சி கூட்டங்களுக்கு பேனர்கள், கட் அவுட்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், வாகனங்களில் அதிகளவு பொதுமக்களை ஏற்றி செல்லவும்தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எத்தனை அரசியல் கட்சிகள் இந்த உத்தரவை மதிக்கும் என தெரியவில்லை.

Suggest a
correction
View
Comments
Post
Comments