March 23, 2019 Saturday 07.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 11:55 AM

பொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணை வெளியீடு 

Posted Date : Mar 14 2019 11:55 AM

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை நேற்று முன்தினம் டி.ஜி.பி.ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. நேற்று விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மட்டுமின்றி, மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், நேர்மையான விசாரணை செய்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggest a
correction
View
Comments
Post
Comments