March 23, 2019 Saturday 08.36 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 2:39 PM

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி - அமைச்சர் கே.சி.வீரமணி 

Posted Date : Mar 14 2019 2:39 PM

வேலூர் மக்களவை தொகுதியில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். ஆரணி அல்லது வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் தற்போது புதிய நீதிக்கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். ஏ.சி.சண்முகம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggest a
correction
View
Comments
Post
Comments