March 23, 2019 Saturday 08.08 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 4:48 PM

முகிலன் காணவில்லை - சி.பி.சி.ஐ.டி. போஸ்டர் 

Posted Date : Mar 14 2019 4:48 PM

முகிலன் காணவில்லை என சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த மாதம் 14 தேதி இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரை செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மதுரைக்கு சென்று சேரவில்லை. ரயிலில் ஏறுவதற்கு முன்பு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. முகிலன் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்ததும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது.

முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முகிலன் காணவில்லை என்றும், அவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

முகிலன் காணாமல் போய் ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது வரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முகிலனை கண்டுபிடிக்காதது சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments