May 24, 2019 Friday 08.54 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 5:01 PM

தஞ்சாவூரில் தாமாக போட்டி - ஜி.கே.வாசன் அறிவிப்பு 

Posted Date : Mar 14 2019 5:01 PM

தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அல்லது வேறு சின்னத்தில் போட்டியிடுமா என்பது குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை