May 24, 2019 Friday 09.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 5:35 PM

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவானது!

Posted Date : Mar 14 2019 5:35 PM

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வந்தது. மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவாகிவிட்ட நிலையில் இறுதியாக இன்று காங்கிரஸ் உடன் திமுக ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதிகள் முடிவானதாகவும், நாளை திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பார் என்றும் அறிவித்தார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை