May 24, 2019 Friday 08.38 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 14 2019 8:39 PM

பொள்ளாச்சி சம்பவத்தை அம்பலப்படுத்திய நக்கீரன் கோபாலுக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன்

Posted Date : Mar 14 2019 8:39 PM

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் நாளை காலை 11 மணிக்கு சென்னை பழைய ஆணையர் அலுவலத்தில் ஆஜராகுமாறு மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம்  காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் தொடர்பான காணொளி காட்சியை வெளியிட்டு தமிழகம் முழுவதும் இந்த சம்பவத்தை கொண்டு செல்ல நக்கீரன் ஆசிரியர் கோபாலும் காரணம். 

இந்த வீடியோவில் நக்கீரன் கோபால் குற்றத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும், அவர்களுக்குள்ள அரசியல் பின்னணி குறித்தும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை