March 23, 2019 Saturday 07.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 2:48 PM

பொள்ளாச்சி சம்பவம்: இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டம்; கல்லூரிகளை மூடி மாணவர்கள் கட்டாய வெளியேற்றம் 

Posted Date : Mar 15 2019 2:48 PM

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கலைக்க முயன்றதால் கல்லூரி மாணவிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggest a
correction
View
Comments
Post
Comments