March 23, 2019 Saturday 08.08 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 5:03 PM

நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

Posted Date : Mar 15 2019 5:03 PM

நியூசிலாந்தில் மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். 

அருகில் உள்ள ஒரு மசூதியிலும் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிசூடு நடத்தினான்.

நியூசிலாந்தில் இதில் ஒரு மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமலில் நேரலை(லைவ்) செய்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டுபிடுக்கப்பட்டு, அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு மசூதிகளிலும்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால், கிறிஸ்ட்சர்ச் நகர் முழுவதும்  பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூட காவல்துறையினர் உத்தரவிட்டனர். குழந்தைகள், மாணவர்களை பள்ளி, கல்லூரியில் இருந்து வீடு திரும்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மசூதியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.
 
இதுகுறித்து கிறிஸ்ட் சர்ச் காவல் ஆணையர் மைக் புஷ் கூறியதாவது:

" கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ஆண்கள், ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேறு யாரும் ஈடுபட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

இந்த தாக்குதலுக்குப் பின் மிகப்பெரிய அளவில் மற்றொரு தாக்குதல் நடத்த வாகனங்களில் வெடிபொருட்களையும் அவர்கள் நிரப்பி வைத்திருந்தனர்.

இந்த துப்பாக்கிக் சூட்டில் மொத்தம் 49 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தும்போது, ஹீக்ளி பார்க் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தியவர் பேஸ்புக், இன்ட்ராகிராமில் நேரலை செய்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.

அந்த வீடியோக் கண்டுபிடித்து நீக்கியுள்ளோம். வேறு யாரைனும் அந்த வீடியோ பகிர்ந்துள்ளார்களா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த வீடியோ உண்மையில் மனதை உறையவைக்கும் விதமாக இருந்தது. அதை மக்கள் யாரைனும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்குள் நுழைந்தது முதல் துப்பாக்கி சூடு நடத்துவதும், தப்பி ஓடுபவர்கள் மீது சுட்டு வீழ்த்துவதுமாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை ஆனால், இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்ரென் கூறுகையில், "கிறிஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. லிண்வுன்ட மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேரும், ஹக்லே பார்க் மசூதியில் 39 பேரும் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதை தீவிரவாத தாக்குதல் என்றுதான் அழைக்க வேண்டும். நீண்டகாலம் திட்டமிடப்பட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்தவர் " எனத் தெரிவித்தார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments