August 23, 2019 Friday 06.49 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 5:17 PM

பொள்ளாச்சி கொடூரம்: திருநாவுக்கரசுவை 4 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 

Posted Date : Mar 15 2019 5:17 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவை 4 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களை சீரழித்ததாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநாவுக்கரசுவை 4 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

பாதுகாப்பை காரணம் காட்டி இந்த வழக்கில் திருநாவுக்கரசு காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை