May 22, 2019 Wednesday 10.16 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 6:28 PM

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க உத்தரவு 

Posted Date : Mar 15 2019 6:28 PM

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இடைக்கால இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை எஸ்.பி. பாண்டியராஜன் வெளியிட்டதற்கு இடைக்கால இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் இடம்பெற்றிருந்தது.

மேலும், 4 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தெரிவித்த கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Suggest a
correction
View
Comments
Post
Comments