March 23, 2019 Saturday 07.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 7:55 PM

முகிலன் எங்கே? : ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முகிலன் #WhereIsMugilan 

Posted Date : Mar 15 2019 7:55 PM

தமிழகம் மறந்துபோன சமூக செயற்பாட்டாளர் முகிலனை இந்த அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்தும் விதமாக வலைதளவாசிகள் ட்விட்டரில் முகிலன் எங்கே? என தேடிவருகின்றனர். 

தற்போது #WhereIsMugilan இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. வலைதளவாசிகள் ட்விட்டர் பதிவில் தமிழக அரசு, சென்னை போலீஸ் உள்ளிட்டோரை டேக் செய்து #WhereIsMugilan என பதிவிட்டு வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் ஒரு மாதமான போதிலும் அவர் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் இருக்கிறது.

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரும் பொதுமக்களை போல முகிலன் காணவில்லை என போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments