March 23, 2019 Saturday 07.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 16 2019 10:53 AM

மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு 

Posted Date : Mar 16 2019 10:53 AM

மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.கணேசமூர்த்தி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

அ.கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி அ.கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments