May 22, 2019 Wednesday 10.41 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 16 2019 11:38 AM

விஜயகாந்த்-முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு 

Posted Date : Mar 16 2019 11:38 AM

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் பழனிச்சாமி சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் சந்தித்து பேசி வருகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 4 தொகுதிகள் என்னென்ன என்று இதுவரை அறிவகிக்கப்படவில்லை. இதுவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதியும், புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கட்சிகளான அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக ஆகிய காட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் ஒரே தொகுதியை இரு காட்சிகள் கேட்பதே காரணம் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை நேற்று அறிவித்தது. காலம் குறைவாக உள்ளதால் அதிமுகவும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை முடிவு செய்வதில் உள்ள இழுபறியை முடிவுக்கு கொண்டுவரவே இந்த சந்திப்பு நிகழ்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Suggest a
correction
View
Comments
Post
Comments