August 23, 2019 Friday 06.48 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 22 2019 4:35 PM

அசைக்க முடியாத பலத்தில் அதிமுக - ஜெ.தீபா ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு 

Posted Date : Mar 22 2019 4:35 PM

வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக மூன்றாக பிரிந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதாவின் உறவினரான ஜெ.தீபா தலைமையில் ஒரு அணியும் உருவானது.

அதன்பிறகு சசிகலா அணி பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி உருவானது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக இணைந்தனர். அவர்கள்தான் அதிமுக என்று தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.

இதனையடுத்து டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்தார். ஜெ.தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற கட்சியை உருவாக்கினார்.

இதனிடையே மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஜெ.தீபா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தனித்து போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, கணக்கிலடங்கா உறுப்பினர்கள் இருப்பதாகவும், தற்போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜெ.தீபாவின் ஆதரவின் மூலம் அதிமுகவுக்கு பெரும் பலம் சேர்ந்துள்ளதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் தெரிவிக்கின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை