May 24, 2019 Friday 07.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 23 2019 9:54 AM

நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ்: நட்சத்திர தொகுதியாகும் தேனி!

Posted Date : Mar 23 2019 9:54 AM

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய வேட்பாளர் பட்டியல் மற்றும் தமிழக வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் நேற்று மாலை முதல் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, முகுல் வாஸ்னிக், சிதம்பரம் மற்றும் மாநிலங்களின் தலைவர்கள், முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமாக அந்தந்த மாநிலத் தலைவர்கள் ஆலோசனைப்படி விவரம் கேட்டு இறுதிப்படுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்தவுடன் நேற்று இரவு சில மாநிலங்களில் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. கரூர் 9.கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் 

1. .திருவள்ளூர் – ஜெயக்குமார் 
2. சிவகங்கை - அறிவிக்கப்படவில்லை. 
3. விருதுநகர் - மாணிக் தாகூர் 
4. தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன் 
5. திருச்சி – திருநாவுக்கரசர் 
6. கரூர் - ஜோதிமணி 
7. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார் 
8. ஆரணி-விஷ்ணுபிரசாத் 
9. கன்னியாகுமரி - வசந்தகுமார். 

இதில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதால் விரைவில் முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன், ரவிந்திரநாத்தும், ஆன்டிபட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ தங்க தங்கச் தமிழ்செல்வன் அமமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

வசந்தகுமார் கடந்த தேர்தலை போலவே கன்னியாகுமரில் பொன்னாருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை