May 24, 2019 Friday 06.23 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 23 2019 3:25 PM

எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு மோடியையும், அமித்ஷாவையும் முதல்வர் வணங்குகிறார் - ஸ்டாலின் 

Posted Date : Mar 23 2019 3:25 PM

தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மணி மற்றும் தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கெண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். மறைந்த திமுக தலைவர் நின்று வென்ற சின்னம் உதயசூரியன் என்றார். எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மறந்து விட்டு முதல்வர் எடப்பாடி பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் வணங்கி வருகிறார்.

அதிமுக-வை அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார். அதிமுக-வின் தேர்தல் அறிக்கைக்கும், முதல்வர் பழனிசாமியின் பிரச்சார கருத்துகளுக்கும் இடையே நிறைய முரண்பாடு நிலவுகிறது. ஆளில்லாத ஆளுங்கட்சியாக திகழ்கிறது அதிமுக. முதல்வர் பழனிசாமி தனியாக வேனில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சி தான். மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டிய தேர்தல் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது அவரை புகழக்கூடிய புலவராக மாறி இருக்கிறார். ஜெயலலிதாவை திட்டித் தீர்த்து புத்தகம் வெளியிட்ட ராமதாசோடு எடப்பாடி பழனிசாமி கூட்டு வைத்துள்ளார்   

கூட்டணி என்ற பெயரில் கொள்கையை அடகு வைத்துள்ள கட்சி பாமக.  எடப்பாடி பழனிசாமி ராமதாஸ்க்கு மணியடிக்கிறார் என கூறியவுடன் கோபம் வருவது ஏன்?. இவ்வாறு அவர் பேசினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை