January 25, 2020 Saturday 12.43 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 13 2019 10:54 AM

என்னுடைய கதையை திருடி என்னையே நடிக்க வைத்த இயக்குநர் - நடிகர் பார்த்திபன் ஆதங்கம் 

Posted Date : May 13 2019 10:54 AM

என்னுடைய கதையை திருடி என்னையே நடிக்க வைத்த வைத்துள்ளனர்; என்ன ஒரு அயோக்கியத்தனம் என்று நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் அயோக்யா. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெட்ரா டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பல இடையூறுகளுக்கு பிறகு வெளியான அயோக்யா திரைப்படம் குறித்து அந்தப் படத்தில் நடித்த பார்த்திபன் விமர்சனம் செய்துள்ளார். அயோக்யா திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், 1994ஆம் ஆண்டு வெளியான 'உள்ளே வெளியே' படத்தை லவுட்டி தன்னையே நடிக்க வைத்தது என்ன ஒரு அயோக்கியாத்தனம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கதை திருடியது குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? என இயக்குநருக்கு கேள்வி எழுப்பிய பார்த்திபன், வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பார்த்திபனின் பதிவை சுட்டிக்காட்டி ஒருவர், “விஜய் நடித்த ஜில்லா படம் கூட உங்களது உள்ளே வெளியே படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதுதான். வசனங்கள் கூட காப்பியடிக்கப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பார்த்திபன், எப்படியோ கல்லா ஃபுல்லானா சரி” என்று கூறியுள்ளார். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை