April 03, 2020 Friday 10.44 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 14 2019 4:39 PM

பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி குறிப்பிடக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை 

Posted Date : May 14 2019 4:39 PM

பள்ளி மாற்றுச்ச்சான்றிதழ்களில் சாதியை குறிப்பிட தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வழக்கமாக பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதி குறிப்பிடப்படும். உயர்கல்விக்கோ, அரசு வேலைவாய்ப்புக்கோ செல்ல சாதி சான்றிதழை வருவாய்துறையிலும் பெறுவது அவசியம்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. அதில், வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை